அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று நாயகனை இந்த மன்னார் மண் இழந்து தவிக்கின்றது-மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள்

மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதி வந்தனைக்கு உரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களுடைய இழப்பானது தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

 ஒரு பெரும் மாமனிதரை இந்த மன்னார் மண் இழந்து தவிக்கின்றது ஒரு மனிதன் வாழ்ந்து முடிந்ததன் பின்னர் ஒரு அழியாத அறிகுறியை விட்டுச் செல்லவேண்டும் என்பார்கள் அந்த அந்த வகையில் இவர் அனைவருடைய மனங்களிலும் இடம்பிடித்த வரலாற்று நாயகனாக இருக்கின்றார்இவருடைய இறப்பின் துயரால் துயருறும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 யுத்த காலங்களிலும் யுத்தத்திற்கு பிற்பட்ட காலங்களிலும் சரி இவருடைய குரல் தமிழருக்காய் ஆணித்தரமாக ஓங்கி ஒலித்தது நாம் அனைவரும் உணர்ந்தே இன்று இவருடைய இழப்பானது நமக்கெல்லாம் மிகுந்த வேதனையை தருகின்ற இந்த வேளையில் அவருடைய ஆத்மா நித்திய இளைப்பாறறில் சாந்தி பெற இந்த நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம் என மன்னர் இந்து மத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

.
வரலாற்று நாயகனை இந்த மன்னார் மண் இழந்து தவிக்கின்றது-மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் Reviewed by Author on April 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.