அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த நிழற்படங்களை வௌியிட்டது சீனா

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய Zhurong rover விண்கலத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை சீனா வௌியிட்டுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி மையம், தனது வலைத்தளத்தில் இந்த நிழற்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த நிழற்படங்கள் கிரகத்தின் நில அமைப்பை காட்டுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

 சீனாவின் Zhurong விண்கலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய நாடுகளில் அமெரிக்காவை தொடர்ந்து சீனா இரண்டாவது நாடாக பதிவாகியுள்ளது. தரையிறங்கியது மட்டுமல்லாமல் அதை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இயக்கும் சிறப்பையும் சீனா பெற்றுள்ளது. 06 சக்கரங்கள் கொண்ட குறித்த ரோவர் அங்கு 90 நாட்கள் வரை பணியாற்றும் என சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த நிழற்படங்களை வௌியிட்டது சீனா Reviewed by Author on May 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.