மன்னார் மாவட்டத்திலும் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
இந்த நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய எதிர் வரும் 31 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது.
-இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மன்னார் நகர் பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களிற்கும் வருகை தந்தனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடமாடுவதற்கு பொலிஸாரும், இராணுவமும் அனுமதி வழங்கி உள்ளனர்.
-மேலும் வீதிகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுபவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
-மேலும் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை.மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள்,பெண தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறு மீனவர்கள் பாதீக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலும் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
Reviewed by Author
on
May 25, 2021
Rating:
Reviewed by Author
on
May 25, 2021
Rating:


No comments:
Post a Comment