மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று ஆராய்வு.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 'ஐ' iroad வேளைத்திட்டத்தின் கீழ் வீதி அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னாரில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையான குறித்த வீதி அகலப்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதினால் குறித்த வீதி அமைக்கும் பணி தாமதமாகி வருகின்றது.
குறிப்பாக குறித்த வீதி அகலப்படுத்துவதினால் சில பிரச்சினைகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் நேற்று (13) வியாழக்கிழமை மாலை உரிய அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, அப்பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக குறித்த வீதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும் போது வீடு ஒன்றின் மதில் அகற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.
மேலும் குறித்த பகுதியில் கழிவு நீர் வடிகான் ஒன்றை அமைத்து வீதியை அகலப்படுத்தி செப்பனிடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
-இந்த நிலையில் குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள எதிர் வரும் திங்கட்கிழமை(17) காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்இடம் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று ஆராய்வு.
Reviewed by Author
on
May 14, 2021
Rating:
Reviewed by Author
on
May 14, 2021
Rating:


No comments:
Post a Comment