மன்னாரில் கொரோனா முடக்க நிலை காரணமாக வீட்டில் இருந்து முஸ்ஸீம்கள் நோன்பு தொழுகை
கொரோனா தொற்று பரவல் காரணமாக எதிர் வரும் திங்கட்கிழமை காலை வரை அரசாங்கத்தினால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இலங்கை வாழ் முஸ்ஸீம்கள் இன்றைய தினம் தமது வீடுகளில் இருந்தவாறு சுகாதார நடை முறைகளை பின்பற்றி பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன் பெருநாள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்து சுகாதார நடை முறைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தவாறே நோன்பு பெருநாள் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறும் கொரோனா விரைவில் இந்த முழு உலகத்தை விட்டு விலக எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்குமாறும் மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி எஸ்.எ.அசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் கொரோனா முடக்க நிலை காரணமாக வீட்டில் இருந்து முஸ்ஸீம்கள் நோன்பு தொழுகை
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment