மன்னாரில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் போத்தல்கள் கையளிப்பு!
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை கையளித்தனர்.
இதன் போது மன்னார் உதவி மாவட்ட செயலாளர் எஸ். குணபாலன் , மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கே.திலீபன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒரு தொகுதி குடி நீர் போத்தல்கள் கையளிப்பு!
Reviewed by Author
on
May 26, 2021
Rating:
Reviewed by Author
on
May 26, 2021
Rating:






No comments:
Post a Comment