மன்னாரில் பாரிய ஆக்கிரமிப்புக் களையாக காணப்படும் கருவேல முள்ளு மரங்களில் இருந்து வெளியாகும் நச்சுவாயு மனிதரில் உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும்
மன்னார் மாவட்டத்தில் பாரிய ஆக்கிரமிப்புக் களையாக காணப்படும் கருவேல முள்ளு மரங்கள் பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தின் 2002.07 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில்
மன்னார் மாவட்டத்தில் மிகவும் அபாயகரமானது என்று கருதப்பட்டு வருகின்ற இந்த கருவேல மரம் என்னும் ஊடுருவல் தாவரம் 1990 களுக்கு முன் இவ்வாறு செரித்து காணப்படவில்லை அந்த காலத்தில் இப்பகுதியில் உடை என்று சொல்லப்படுகிற மரம் பெருமளவில் பரவி இருந்தது
இந்த ஊடுருவல் தாவரம் இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் பரவியிருக்கின்றது இது வறட்சியான வரட்சி காலநிலையில் சிறப்பாக வளரக்கூடிய தாவரம்
இந்த தாவரம் ஏனைய தாவரங்களோடு போட்டி போட்டு அவற்றைவிட சிறப்பாக வளரக்கூடியது இதனால் மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான பல மூலிகைகளும் மரங்களும் வளர்ச்சி அடையாமல் அழிந்து போகக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது
இதன் வேர் தொகுதி மிக ஆழமான பகுதியில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்து மிகவும் பசுமையாக வளரக்கூடியது எனவே இந்த தாவரம் எமது பிரதேசத்திற்கு அழிவை கொண்டு வருகின்ற தாவரமாக காணப்படுகின்றது.
இந்த மரத்தின் மகரந்தத்தில் இருந்து வருகின்ற வாசனை மனிதருடைய மனங்களில் பாதகமான சிந்தனை ஓட்டத்தை ஏற்படுத்தக்கூடியது என்று அமெரிக்க ஆய்வுகள் குறிப்பிடுகின்றது
இந்த மரங்கள் இருக்கும் பிரதேசத்தைக் கடந்து செல்பவர்கள் அந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்களுடைய மனநிலையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக அவர்களுடைய சிந்தனையை பாதிக்கக்கூடிய ஒரு ரசாயனத் தன்மையை இந்த மரம் கொண்டிருக்கின்றது.
வருங்கால சந்ததியை பாதுகாப்பதற்கு இந்த மரங்களை அழிக்க வேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் இருக்கின்றது
இந்த செயற்பாட்டை அரசு மட்டுமல்ல அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இந்த மரத்தை அழித்து இந்த மரங்கள் அழிக்கப்படும் இடத்தில் புதிய மரங்களை புதிய எங்களுடைய மாவட்டத்தின் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன் தரக்கூடிய புளி இலுப்பை வேம்பு போன்ற மரங்களை நட்டு இந்த பிரதேசத்தை கருவேல மரங்களின் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்த குமார்அவர்கள் தெரிவித்தார்.
மன்னாரில் பாரிய ஆக்கிரமிப்புக் களையாக காணப்படும் கருவேல முள்ளு மரங்களில் இருந்து வெளியாகும் நச்சுவாயு மனிதரில் உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும்
Reviewed by Author
on
May 08, 2021
Rating:

No comments:
Post a Comment