மட்டக்களப்பு நகருக்குள் அநாவசியமாக பிரவேசிப்போரை திருப்பி அனுப்பிய பொலிசார்.
அதேவேளை இன்றைய தினம் நகரிற்குள் நெரிசலை குறைக்கும் நோக்கில் பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மட்டக்களப்பு நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வழிகளான கல்லடி பாலம், தாண்டவன்வெளி சந்தி மற்றும் வவுணதீவு போன்ற பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசிய தேவைகளுக்காக பயணித்தோர் எங்கிருந்து வந்தார்களோ அப் பகுதிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
நகருக்குள் சனா நெரிசலை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக அதாவது வைத்தியசாலைகளுக்கு செல்வோர் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கான கடமைகளுக்காக பயணித்தோர் மாத்திரம் நகருக்குள் செல்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடமையில் ஈடுபட்ட பொலீசார் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி பெற்று செல்பவர்கள் அதற்கான அனுமதிப் பத்திரங்களை கொண்டுள்ளார்களா என்பது தொடர்பாக சோதனையிட்டதன் பின்னர் பயணிப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தனர்.
மட்டக்களப்பு நகருக்குள் அநாவசியமாக பிரவேசிப்போரை திருப்பி அனுப்பிய பொலிசார்.
Reviewed by Author
on
May 25, 2021
Rating:
Reviewed by Author
on
May 25, 2021
Rating:







No comments:
Post a Comment