அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும், செங்கலடி சுகாதார பிரிவில் 15 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11 பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 05 பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 04 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 03 பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேருமாக இவை இனங்காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 57 பேர் மரணமடைந்துள்ளனர். மூன்றாவது அலை காரணமாக 2952 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 48 பேர் மரணமடைந்துள்ளனர். 

கடந்த ஏழு தினங்களில் 693 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 06 தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 19959 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்படுவர்கள் ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு அதிகமானவர்கள், ஆபத்து நிலை அதிகமுள்ள கர்ப்பிணிப்பெண்கள், வயோதிப மடத்தில் உள்ளவர்கள், ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றது. பயணத்தடை அமுலிலுள்ள போதிலும் மக்களின் நடமாட்டம் மிகவும் அதிகளவிலேயே காணப்படுகின்றது. கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் பயணக்கட்டுப்பாட்னை பயன்படுத்தி வீட்டில் இருப்பதன் மூலமே தொற்றின் அதிகரிப்பினை குறைக்கமுடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் ! Reviewed by Author on June 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.