அண்மைய செய்திகள்

recent
-

பயணக் கட்டுப்பாடுகளை தரவுகளே நீடித்தன என ஜனாதிபதி விளக்கம்!

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா மரணங்கள் தொடர்பில் கிடைத்த தவறான தரவுகளின் காரணமாகவே இம்மாதம் 21ஆம் திகதி வரை அதனை நீட்டிக்க வேண்டி ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இம்மாதம் 11 ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், இம்மாதம் 21ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடிய போது ஜனாதிபதி கூறியுள்ளார். 

 அதன் பின்னர், குறித்த கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கமளித்துள்ளார். இதன்போது, சில கொரோனா மரணங்கள் இவ்வாண்டு பெப்ரவரி ஆறாம் திகதி முதல் இம்மாதம் 11ஆம் திகதி வரையான நான்கு மாதக் காலப் பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், சில கொரோனா மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

 இம்மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை தரவுகளே நீடித்தன என ஜனாதிபதி விளக்கம்! Reviewed by Author on June 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.