மன்னாரில் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) ஐவர் கைது
மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை (17) காலை மன்னார் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த பகுதிகளில் வைத்து குறித்த 5 நபர்களும் கைது செய்யப்பட்டதோடு,அவர்களின் உடமையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் 5 பேரூம் விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் (கசிப்பு) ஐவர் கைது
Reviewed by Author
on
June 17, 2021
Rating:
Reviewed by Author
on
June 17, 2021
Rating:


No comments:
Post a Comment