ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பேச்சு
அம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு பில்லியன் ரூபா செலவாகும். மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின் நிற்கப்போவதில்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் விவாட் கப்ரால் கூறினார்.
பயணத்தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் நாட்டிற்கு 45 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுர் உற்பத்திகளினால் கிடைக்கும் வருமானம் ஆயிரத்து 500 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
பயணத் தடை காலப்பகுதியில் சிறிய அளவிலான வர்த்தகர்களின் வருமானம் வீழ்ச்சி கண்டிருப்பதனால் கடன் செலுத்தும் வீதமும் குறைவடைந்திருக்கின்றது. இது பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார. இதேவேளை, அரச சேவையாளர்களில் அதிகளவானோருக்கு வேலை வழங்காது சம்பளம் வழங்கும் நிலை ஏற்பட்டிப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.
பொதுவான வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதகாவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 15 மாதங்களாக இந்த நிதி சேமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது
.
.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பேச்சு
Reviewed by Author
on
June 16, 2021
Rating:

No comments:
Post a Comment