லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு !
அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதனால் பொலிஸ் விசாரணையினை தொடர்ந்து சடலத்தை சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு !
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment