ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்? − மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் கைது....!
குறித்த வீட்டில் 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பணிப் பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
22 வயதான யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான 44 வயதான மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்னர்.
ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்? − மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் கைது....!
Reviewed by Author
on
July 23, 2021
Rating:

No comments:
Post a Comment