ரிஷாத் பதியுதீனுக்கு மாரடைப்பு : தேசிய வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 42 ஆம் இலக்க சிகிச்சை அறையில் அவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்தன.
ரிஷாத் பதியுதீன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள நிலையில், அதனையடுத்தே அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சி.ஐ.டி.யினர் அழைத்து சென்றதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளை அடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினரின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்
ரிஷாத் பதியுதீனுக்கு மாரடைப்பு : தேசிய வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
July 17, 2021
Rating:

No comments:
Post a Comment