சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறை சாட்சிகள் நினைவு விழா.
கடந்த வெள்ளிக்கிழமை (16) அருட்தந்தை லுமன் லோகு அவர்களினால் கொடியேற்றத்துடன் திருப்பலியும் இடம் பெற்றதுடன் நேற்று சனிக்கிழமை (17) காலை 7.15 மணிக்கு அருட்பணி சூ.அன்ரனி பொன்சியன் அவர்களின் தலைமையில் நினைவு விழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக தோட்டவெளிப்பங்குத்தந்தை அருட்பணி டே.அலெக்சாண்டர் சில்வா (பெனோ) , செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் செபமாலை ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
மன்னார் சமூக நல அமைப்பின் தலைவர் சந்தியோகு(அமிர்தம்) அவர்களின் தலைமையிலான விழாக்குழு இவ்திருவிழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
திருவிழாவின் நிறைவில் மன்னார் மறைசாட்சிகளின் புனித நிலைக்கு உயர்த்துவதற்கான உருக்கமான செபவேண்டுதலும் வழமைபோல் இல்லாமல் குறைவான பக்தர்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றுச்சென்றனர்.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சுகாதார விதி முறைகளுக்கு உட்பட்டு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறை சாட்சிகள் நினைவு விழா.
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment