அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இன்று மேலும் ஒரு கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) காலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அவர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று சனிக்கிழமை (14) காலை உயிரிழந்தார். 

 அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (13) வரையிலான 13 நாட்களில் 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1244 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1261 கொரோனா தொற்றாளர் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் இன்று மேலும் ஒரு கொரோனா மரணம் Reviewed by Author on August 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.