அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் பலத்த மழை; 21 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது. ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஹூபெய் மாகாணத்தில் நேற்றும், இன்றும் 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீற்றர் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. 8 ஆயிரம் பேர் ஆபத்தான பகுதியிலிருந்து மீட்கப்பட் டுள்ளனர். பலத்த மழை காரணமாக 21 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு 300க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பலத்த மழை; 21 பேர் உயிரிழப்பு Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.