மன்னாரில் நீண்ட இடைவெளியின் பின் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!
இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றியது.
குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது 'A, B, C, D, E' ஆகிய 5 பிரிவுகளில் நடைபெற்றது.
இதன்போது ' A 'பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன் ,2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா,3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலை சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.
'B' பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்,2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.
'C' பிரிவில் 1 ஆம் இடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸ், 2 ஆம் இடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரன்,3 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.
'D' பிரிவில் 1 ஆம் இடத்தை சிறுகண்டலை சேர்ந்த கென்றிகா,2 ஆம் இடம் மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை,3 ஆம் இடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.
'E' பிரிவில் 1 ஆம் இடத்தை நானாட்டானை சேர்ந்த குகன், 2 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜ்,3 ஆம் இடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோரது காளைகளும் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டிக்கு வட மாகாணத்தில் உள்ள ஏனைய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் போட்டியில் பங்கு கொள்வது வழமை.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏனைய மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் நீண்ட இடைவெளியின் பின் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:


No comments:
Post a Comment