ஞானசார தேரரிடம் மன்னார் தமிழர்களை கையேந்த வைத்த மன்னார் அரசியல் வாதிகளும் மடு ஆலய நிர்வாகமும்
மறுபுறம் குறித்த காணி தங்களுக்கு வேண்டுமென மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரிவந்ததுடன் தென்னிலங்கை அமைச்சர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தை மீறி காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் போன்றவற்றை நாடியதுடன் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களையும் குறைக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
இந்நிலையில்தான் மன்னார் திருக்கேதீசஸ்வர ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டுமென இடம்பெற்ற விஷேட பூஜையில் பங்கேற்க பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர்
ஞானசாரதேரர் மன்னார் வந்த நிலையில் இடைவழியில் வழிமறித்த விவசாயிகள் தங்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில்மோட்டை வயல் காணிக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட ஞானசாரதேரர்.
அதை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஞானசார தேரர் தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதைவிட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் ஆன நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்
ஞானசார தேரரிடம் மன்னார் தமிழர்களை கையேந்த வைத்த மன்னார் அரசியல் வாதிகளும் மடு ஆலய நிர்வாகமும்
Reviewed by Author
on
September 23, 2021
Rating:
Reviewed by Author
on
September 23, 2021
Rating:













No comments:
Post a Comment