விபத்தில் சிறுவன் பலி
விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, விலத்த பிரதேசத்தை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மேதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரையும், பின்னால் இருந்து பயணித்த சிறுவனையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த குறித்த சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் சிறுவன் பலி
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment