அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்று வருகின்றது. 

 நிகழ்நிலையில் இன்று காலை 9 மணிக்கு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா ஆரம்பமானது. பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின் யுரியூப் மற்றும் முகப்புத்தக பக்கம் ஆகியவற்றினூடாக நேரலை மூலம்


ஆகிய இணைப்புகளின் மூலம் ஒளிபரப்பாகிறது. இதே நேரம், நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்! Reviewed by Author on October 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.