அண்மைய செய்திகள்

recent
-

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம்

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க கடந்த 23.03.2021ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வணிகத் துறையைப் பாதிக்கும் கொள்கை அல்லது சட்ட விடயங்கள் குறித்த ஆய்வுக் குழுவில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் பங்கேற்புடனும் இந்த சட்டமூலம் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டது. இந்தக் குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, முன்மொழியப்பட்ட சட்டத்தின் நடைமுறைத் திகதியில் 52 வயதை எட்டாத ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை 60 வயது வரை நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம் Reviewed by Author on October 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.