டெல்டா பிளஸ் திரிபு கொரோனா இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம் : மருத்துவர் ஹேமந்த ஹேரத்
டெல்டா பிளஸ் திரிபு கொரோனா வைரஸானது நாட்டுக்குள் குடியேறியோர் மூலம் நுழைவது சாத்தியம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தத் திரிபு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்குள் நுழைவதைத் தாமதப்படுத்தலாம் எனினும் நுழைவதற்கான சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வைரஸ் பரவுவது மக்களின் சுகாதார நடைமுறைகளைப் பொறுத்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது டெல்டா பிளஸ் திரிபு அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாகவும் மருத்துவர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
டெல்டா பிளஸ் திரிபு கொரோனா இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம் : மருத்துவர் ஹேமந்த ஹேரத்
Reviewed by Author
on
October 22, 2021
Rating:
No comments:
Post a Comment