குடும்பப் பெண்ணின் உயிருக்கு எமனான வாகனம்
ஐந்து மாத கர்ப்பிணியான 24 வயது அவரது மகள் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டி போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மாத்தறை தீவிர சிகிச்சைப் பிரிவிலும், கெப்' வாகனத்தைச் செலுத்தியவர் மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த குறித்த பெண்ணின் வீட்டின் முன்னுள்ள பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கவிழ்ந்தமையால் அதைத் தூக்கி உதவி செய் வதற்காகக் குறித்த பெண் தனது மகளுடன் வீதிக்கு சென்ற போதே வேகமாக வந்த கெப்' ரக வாகனம் குறித்த இருவரையும் மோதி முன்னோக்கிச் சென்று மதிலில் மோதி நின்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண்ணின் உயிருக்கு எமனான வாகனம்
Reviewed by Author
on
October 07, 2021
Rating:

No comments:
Post a Comment