அண்மைய செய்திகள்

recent
-

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! என் மனச்சாட்சிப்படி,மனதிலுள்ள எனது கேள்விகளுக்கு பதிலளிப்பீர்களா?

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! என மனச்சாட்சிப்படி,மனதிலுள்ள எனது கேள்விகளுக்கு பதிலளிப்பீர்களா:

 - [ ] உங்களை 2013ல் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலம் அறிமுகம் அடைந்து உங்களுடன் கட்சி ரீதியாக இணைந்து அரசியல் செய்தவன் என்ற ரீதியில் உங்களுடன் சிறு கேள்விகள்?? 

 - [ ] *கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் சரியில்லை என்றுதான் இளைஞர்கள் மூலம் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று உங்களை போன்ற இளைஞர் தெரிவாக காரணமாகும். அந்த வகையில் உங்களுக்கு வாழ்த்துக்கள். 

 - [ ] *அரசியல் செய்ய வீண் வார்த்தைகளை பேசுவதும்,மற்றவர்களின் மீதும் நேரடி குறை கூறுவதே இலக்காக கொண்டு அரசியல் செய்யும் நீங்கள் ஒரு கணம் உங்களுக்கு வாக்களித்த மக்கள் பற்றி சிந்தித்து உள்ளீர்களா!! 

 - [ ] #இன்று வரை உங்களால் செய்யப்பட்ட ஆக்கபூர்வமான விடயங்கள் என்ன? நிகழ்ச்சி திட்டமிடல் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்று வெளிநாட்டில் படித்து பல புலமை பெற்ற நீங்கள் முன் வைத்த யோசனைகள் உண்டா? தற்கால பிரதிநிதி போன்றவர்களைபோலவே நீங்களும் என்பதை உறுதிப் படுத்தியுள்ளீர்கள். 

 - [ ] #ஞானசாரதேரர் பௌத்த பிக்கு இஸ்லாமிய கடவுள் அல்ஹா என்பவர்க்கு ஏசியதற்கு நீங்கள் பாராளுமன்றத்தில் பதைபதைத்து பேசினீர்களே! அந்த இடத்தில் ஒரு இஸ்லாமிய நீதி அமைச்சர் கூட அமர்ந்து இருந்தனர் 18 முஸ்லீம் பிரதிநிதிகளும் அமர்ந்து இருந்தனர் அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு வந்ததை இட்டு பெருமிதம் கொள்கிறேன். 

 - [ ] #இருந்த போதும் கடந்த காலத்தில் கௌரவ அமைச்சரும் உங்களுடைய அரசியல் நண்பரும் ஆன ஹிஸ்புல்லா அவர்களால் இந்துக்களின் ஒரு கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு மீன் சந்தையும் கட்டப்பட்டது.இது சம்பந்தமாக காணொளியும் உள்ளது.இந்த விடயங்கள் சம்மந்தமாக எந்தவிதமான நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?? இது தொடர்பாக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] #கடந்த காலத்தில் எமது மாவட்டத்தில் சொல்ல முடியா துயரத்தினுடாக எமது மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். அந்தவகையில் நீங்கள் உரிமை மீட்பவர் எனும் சிந்தாந்தம் கொண்ட கட்சியில் உள்ள நீங்கள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த ஒரு சிலவற்றை பட்டியல் ஈடுகின்றேன். 

 - [ ] # கோவில்கள் இடிக்கப்பட்டு காணி அபகரிப்பு செய்யப்பட்டது(ஓட்டமாவடி,வாகனேரி, 

- [ ] ஆரையம்பதி ஓல்லிக்குளம்,)இது தொடர்பாக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] #1983தொடக்கம் 2009வரையான காலப்பகுதிகளில் விடுதலைபுலிகளால் நடைபெற்ற யுத்தத்தினை மறுத்து வடகிழக்கில் தமிழ் அப்பாவி பொதுமக்கள் வேறு விடுதலைபுலிகள் வேறு என்று ஒரு முஸ்லீம் மக்கள் பிரதிநிதியாவது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது உண்டா? 

 - [ ] #கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்குள்ள முஸ்லீம் MP மக்கள் பிரதிநிதிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்ற போது !நிலத்தொடர்பு இன்றிய கல்வி வலயம் மட்டக்களப்பில் முஸ்லீம்களுக்கு உள்ளது இது தொடர்பாக குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] #நாட்டின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் தமிழர்களுக்கு வழங்கிய 53 உறுதி காணிகளை கூட தற்போது வரை தெப்பிரட்டிய முறையில் அபகரிப்பு செய்து உறுதி இல்லாமால் ஓட்டமாவடி பிரதேச செயளாலர் அனுமதியினை பெற்று வாழைச்சேனை பிரதேச செயலாளரின் அதிகாரம் கொண்ட பகுதியில் மின்சாரம்,கட்டடநிர்மானம் என்பனவற்றை செய்துள்ளனர்.(சம்பவம் வாழைச்சேனை) இவ்வாறான வரம்பு மீறல்கள் தொடர்பாக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] # ஓட்டமாவடியின் தற்போதைய தமிழர்களின் எல்லை கிராமமான பண்டைய ஊர் மூறாக்கை மரம் கொண்டமையால் அவ் ஊரை முறாஓடை என்று அழைத்து வந்த பழைய ஊரை தங்களது அதிகாரத்தின் ஊடாக தற்போது மீறாஓடையாக மாற்றம் செய்து ஒரே கிராம சேவகர் பிரிவில் இரண்டு கிரமாசேவகர்,இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,இரண்டு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என்று எல்லைகளை கபளீகரம் செய்கின்றனர். இது சம்மந்தமாக ஒரு முறை சரி கவனம் எடுத்தது உண்டா?? 

 - [ ] #முறாஓடை சக்தி வித்தியாலயம் பாடசாலை மைதானம் தனி ஒரு முஸ்லீம் மனிதனால் அபகரிப்பு செய்து மரம் அரியும் தொழிற்சாலை செய்யப்படுகிறது. இது தொடர்பாக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] #பின் தங்கிய எல்லை கிராமமான வாகனேரி,ஊத்துச்சேனை,வடமுனை போன்ற பகுதிகளில் சிங்களவர்களாலும்,முஸ்லிம்களாலும் போலியான ஆவணங்களை கொண்டு காணி,மணல் அபகரிப்பு தற்போது வரை நடைபெறுகின்றது. இது தொடர்பாக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?? 

 - [ ] #மயிலத்தமடு,மாதவனை நிலஅபகரிப்பு சம்மந்தமாக உங்களுடைய கட்சியினை சார்ந்த அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் அமைதியான இராஜதந்திரமூலம் நீதிமன்றத்தை நாடியிருந்த வேலை உங்களுடைய பிரபல்யத்திற்காக பாராளுமன்றத்தில் சிறுபிள்ளைத்தனமான வேடிக்கை வார்த்தைகளால் சிங்களதலைவர்கள் சீறி எழ காரணமாக இருந்தது இதனால் இன்று வரை மயிலத்தமடு மாதவனை பகுதிகள் கேள்விக்குரியாகவே உள்ளது!! 

- [ ] #P2P மாபெரும் போராட்டம் நடைபெற்றது இதனால் நடந்த மாற்றம் என்ன தங்களை தாங்களே விளம்பரம் செய்யும் பாதை யாத்திரையாக வலம் வந்ததை காணமுடிகின்றது.(இளம் தலைமுறையினரை உணர்வு அரசியலால் உசுபேற்றி உங்களுக்காகவே அரசுயலில் உழைத்த பயிலுனர் பட்டதாரிகருணாகரன் சோபணனின் நிலை தற்போது வரை சிறைவாசம்.இது தொடர்பாக பதில் உண்டா?? 

- [ ] #ஷாஹறான் குண்டு வெடிப்பின் போது தமிழ் பிரதேசங்களில் உடலங்களை புதைக்க முற்பட்ட போது எங்கள் உங்கள் உணர்வு? 

- [ ] #நீங்கள் 2013ல் இருந்து அரசியல் செய்யும் நீங்கள் சமூகமட்ட எந்தவொரு போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதும் கலந்து கொள்ளாத நீங்கள் தற்போது பதவி வந்த பிறகு வருவது என்பது வேடிக்கையாக உள்ளது. 

- [ ] #முடிய அறைக்குள் முகம் காட்டா மறைமுக அரசின் நிரழ்ச்சி நிரல்களை செய்யும் தாங்கள் எப்போதும் உண்மை முகம் கிழிக்கப்படும்போது தெரியவரும் அப்போது பதில் உண்டா? 

 - [ ] # 48கிராமசேவகர்பிரிவு, 90000மேல் மக்கள் தொகையை கொண்ட மட்டக்களப்பு பிரதேச செயலகம்,39கிராமசேவகர்,88000மேல் மக்கள் தொகையை கொண்ட செங்கலடி பிரதேச செயலகம் இருக்கின்ற போது ஓட்டமாவடி மத்தி 08கிராம சேவகர்,24000மக்கள் தொகையும் கொண்ட பிரதேச செயலகம் ,11கிராமசேவகர் பிரிவும்,16000 மக்கள் தொகையும் கொண்ட கோறளைப்பற்று மேற்கு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருந்த போதும் இரண்டுக்கும் இடைப்பட்ட வேறுபாடுகள் பற்றி குரல் கொடுத்தது உண்டா?! 

- [ ] #வெப்பவட்டவான் ,பாளாமடு பகுதியில் (கொடவெளி) வயல் மணல் அகழ்வு நடைபெற்ற போது அதை நிறுத்தியதாக மீடியாக்கள் மூலம் பிரபல்யமாக கூறினீர்கள் இன்று வரை மணல் அகழ்வு நடைபெற்ற வண்ணமே உள்ளது இது தொடர்பாக உங்கள் குரல் தொடர்கின்றதா?? 

- [ ] இதுவும் கடந்து போகும் என்பதே உங்கள் பேச்சு!! 

 - [ ] #வயல் திருத்தம் என்று கொண்டு 60,70அடிக்குமேல் நிலத்தடி மணல் அகழ்வு நடைபெறுகின்றது. ஒரு வயல் திருத்தம் செய்ய Excavater எதற்கு jcb,dozers போன்ற கனரக வாகனமே தேவையாகின்றது, இருந்தும் அனுமதி கொடுத்த விவசாய மாவட்ட அதிகாரி,புவிச்சரிதவியல் அதிகாரி, பிரதேச செயளாலர் ,கிராமசேவகர் போன்றவர்களின் பிழைகளை நேரடியாக மாவட்ட ரீதியில் முன்வைத்தது தீர்வு 

வனேந்திரன் சுரேந்திரன் 
பிரதேச சபைஉறுப்பினர் 
ஏறாவூர் பற்று




கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களே! என் மனச்சாட்சிப்படி,மனதிலுள்ள எனது கேள்விகளுக்கு பதிலளிப்பீர்களா? Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.