அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற உலக சிறுவர் தினம்.

உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

 இதன் போது உதவி பிரதேச செயலாளர் எஸ். டிலக்ஸ்சன் மற்றும் கிராம அலுவலர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக சிறுவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகத்துக்குள் மர நடுகையும் நடை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.









மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற உலக சிறுவர் தினம். Reviewed by Author on October 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.