நாடு மீண்டும் முடக்கப்படலாம் - ஹேமந்த ஹேரத்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 06 மாதங்களின் பின்னர் 10 முதல் 13 வரையான தரங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பது அவசியமான தாகும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும்.
அவ்வாறின்றேல், இந்நிலைமை மீண்டும் மோசமானால், நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தற்போது மீண்டும் பாடசாலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டால் அது மாணவர்களை பாரியளவில் பாதிக்கக்கூடும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் முடக்கப்படலாம் - ஹேமந்த ஹேரத்
Reviewed by Author
on
November 08, 2021
Rating:
No comments:
Post a Comment