அண்மைய செய்திகள்

recent
-

வட்டுவாகல் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இன்று சனிக்கிழமை(27) இராணுவத்தினரால் மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது . முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வா எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் , அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







வட்டுவாகல் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல்! Reviewed by Author on November 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.