மன்னாரில் தொடர் மழை-வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலை
குறிப்பாக தலைமன்னார்,பேசாலை,தாழ்வுபாடு மற்றும் மன்னார் நகர பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும் மன்னார் நகர பகுதியில் வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது.இதனால் மழை வெள்ள நீர் வீடுகளில் தேங்கியுள்ளது.
இதனால் மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதே வேளை மாவட்டத்தில் பல பாகங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ள போதும் மக்கள் இது வரை இடம் பெயரவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தொடர் மழை-வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலை
Reviewed by Author
on
November 26, 2021
Rating:

No comments:
Post a Comment