அண்மைய செய்திகள்

recent
-

கேக் படம் அனுப்பியதற்காக தாதிய மாணவரைத் தாக்கிய கடற்படை மாணவன்!

தனது கைத்தொலைபேசி இலக்கத்துக்கு கேக் படத்தை அனுப்பிய தமிழ் தாதிய மாணவரை கடற்படை தாதிய மாணவன் சரமாரியாக தாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தாதிய பயிற்சிக் கல்லூரியிலேயே நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது, தாதிய பயிற்சி கல்லூரியில் கடற்படையைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெறும் கடற்படை மாணவர் ஒருவர், லண்டனில் தமிழர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சமிக்ஞை காட்டிய இராணுவ அதிகாரியின் படத்தை கடந்த மே 19ஆம் திகதி அனுப்பியுள்ளார் என்றும் இது தமிழ் மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், நேற்றைய தினம் பிறந்தநாள் கேக் வெட்டும் படம் ஒன்றை தமிழ் மாணவர் ஒருவர் குறித்த கடற்படை மாணவனின் கைபேசி இலக்கத்துக்கு அனுப்பினார் என்றும் இதனால், ஆத்திரமடைந்த கடற்படை மாணவன் படம் அனுப்பிய தமிழ் மாண வனை கடுமையாக தாக்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவித்த போதும் நடவடிக்கை எடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர் என்றும் அறிய வருகின்றது

.
கேக் படம் அனுப்பியதற்காக தாதிய மாணவரைத் தாக்கிய கடற்படை மாணவன்! Reviewed by Author on November 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.