அண்மைய செய்திகள்

recent
-

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள்- நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில்இன்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இவ்வாரம் வடக்குகிழக்கு மக்களிற்கு ஒரு முக்கிய வாரம்,வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் அந்த வாரத்தில்அதி விசேட தினம். இந்த தருணத்தில் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்திய சுபாஸ்சந்திரபோஸ் பற்றி அகிம்சாவாதியான மகாத்மாகாந்தி கூறிய வாசகங்கள் சிலவற்றை நான் உங்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல அவரின்வீரம் சகல காரியங்களிலும் பளிச்சென பிரதிபலிக்கி;ன்றது அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார் ஆனால் தோல்வியுற்றார் யார் தான் தோல்வியை தழுவாதவர்கள் என மகாத்மா காந்தி தெரிவித்திருந்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தி பின்வருமாறு கூறினார் இந்தியாவிற்கு ஆற்றிய சேவைக்காக நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வார். அகிம்சையின்பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட வாசகங்களை இலங்கையின் வடக்குகிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத்தமிழனின் இன்றைய பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன் என குறிப்பிட்டார்


.
வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள்- நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் Reviewed by Author on November 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.