மன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டொஸ் களை பெற்ற 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இராணுவத்தினர்,விமானப்படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர்.
எதிர்வரும் வாரம் வரை குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
December 13, 2021
Rating:

No comments:
Post a Comment