தலை மன்னார் மேற்கில் வன வளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு-காணி அளவீட்டு பணிகளை கை விட்டு சென்றனர்.
இதன்போது அங்கு ஒன்று கூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக காணி அளவிடும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வன வளத்திணைக்களத்தினருக்கும், தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலினைத் தொடர்ந்து வன வளத்திணைக்களத்தினர் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
தலை மன்னார் மேற்கில் வன வளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு-காணி அளவீட்டு பணிகளை கை விட்டு சென்றனர்.
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment