20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் இந்தியாவிற்கு
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.
ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.
அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் இந்தியாவிற்கு
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment