சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டது!
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருக்கோ வில் காவல்துறையினர் கலவரங்கள் எற்படாதவாறு நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்குள் புத்தர் சிலையை அகற்றுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் மக்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் மக்களின் பலத்த எதிா்ப்புப் போராட் டத்தினால் குறித்த புத்தர் சிலை அகற்றப்பட்டது.
இதேவேளை, புத்தர் சிலை அமைக்கப்பட்டது தொடர்பாக நேற்று அவ்விடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சேகர் மற்றும் அம்பாறை இணைப்பாளர் துசாந்தன் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டது!
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment