பூநகரி பொலிஸ் பிரிவில் நெஞ்சை உலுக்கும் பயங்கர விபத்து!
மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் வந்து விட்டு , மன்னார் நோக்கி திரும்பும் வேளை பூநகரி - சங்குப்பிட்டி பாலத்தை கடந்து சற்று தொலைவில் , இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பூநகரி பொலிஸ் பிரிவில் நெஞ்சை உலுக்கும் பயங்கர விபத்து!
Reviewed by Author
on
February 28, 2022
Rating:
No comments:
Post a Comment