அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்ட இளையோருக்கான பூப்பந்தாட்ட போட்டி!

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவு மற்றும் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் என்பன இணைந்து இளையோர் பூப்பந்தாட்ட போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை (05) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (06) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாவட்டத்தில் இளையோர் பூப்பந்தாட்ட துறையை ஊக்குவிக்குமுகமாக 11, 13, 15,17, 20 வயது பிரிவுகளின் கீழ் இருபாலாரையும் உள்ளடக்கிய குறித்த குறித்த போட்டி இடம்பெற்றுள்ளது.

 இதன்போது இறுதிநாள் நிகழ்வான பரிசளிப்பில் புலம்பெயர் அமைப்பான உலக பூப்பந்தாட்ட பேரவை (Wtbf) ஸ்தாபகர் கந்தையா சிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பூப்பந்தாட்ட போட்டியில் விஸ்வமடு மகாவித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம், வல்லிபுனம் மகாவித்தியாலயம், இரணைப்பாலை மகாவித்தியாலயம், சிலாவத்தை அ. த. க பாடசாலை, வித்தியானந்த கல்லூரி, கலைமகள் வித்தியாலயம், துணுக்காய் கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.








முல்லைத்தீவு மாவட்ட இளையோருக்கான பூப்பந்தாட்ட போட்டி! Reviewed by Author on February 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.