அண்மைய செய்திகள்

recent
-

போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம்!

 பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான சம்பத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 


இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

பற்றுசீட்டில் நாள் சம்பளம் 1,550 ரூபாஎன்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் வரவு கொடுப்பனவு வேலை நாட்களின் அடிப்படையில் தோட்ட காரியாலயத்தில் சம்பளம் கடந்த 07 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 27 வருட சேவை காலத்தில் போராட்டமின்ற 400 ரூபா அதிகரித்த சம்பளத்தை முதன்முறையாக கரங்களால் பெற்றுக்கொண்டுள்ளதையடுத்து வாக்குறுதி அறித்தமைக்கு அமைய சம்பள அதிகரிப்பை பெற்றுத்தந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். 

இதேவேலை தோட்ட நிர்வாகம் சம்பள உயர்வு கிடைத்ததையடுத்து அதிக கொழுந்து பறிக்கவேண்டும் என்ற அழுத்தம் ஏதும் இதுவரையில் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.





போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம்! Reviewed by Vijithan on February 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.