அண்மைய செய்திகள்

recent
-

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது எரிவாயு சிலிண்டரினால் பொதுமக்கள் தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று(திங்கட்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 கேகாலை மாவட்டத்துக்கான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதான விநியோக முகவரான, கனக ஹேரத் இன்று காலை கேகாலை ரன்வல சந்தியின் ஊடாக பயணித்தபோது, எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்த முற்பட்டதாகவும், அதன்போது வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கையில் இருந்த எரிவாயு சிலின்டரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

 சுமார் இரண்டு தசாப்தங்களாக கேகாலை மாவட்டத்தில் பிரதான எரிவாயு விற்பனை முகவராக இருந்துவரும் கனக ஹேரத், கேகாலை மாவட்டம் முழுவதும் பல எரிவாயு விநியோக முகவர் நிலையங்களையும் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேற்படி சம்பவத்தின் பின்னர் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, சிறிது நேரத்தில் அவ்வீதியின் ஊடாக பயணித்த கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக, சம்பவம் தொடர்பில் அறிந்ததையடுத்து மாற்று வழியில் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது எரிவாயு சிலிண்டரினால் பொதுமக்கள் தாக்குதல்! Reviewed by Author on March 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.