ரஸ்ய ஜனாதிபதியை கொல்வதற்கு அந்த நாட்டின் உயர் குழாமை சேர்ந்த சிலர் திட்டமிடுகின்றனர் - உக்ரைன் புலனாய்வு பிரிவினர்
ரஸ்யாவின் அரசியல் உயர்குழாமின் ஒரு பகுதியினர் சமஸ்டி பாதுகாப்பு சேவையின் இயக்குநர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகொவ் புட்டினிற்கு பின்னர் ரஸ்ய ஜனாதிபதியாக வருவார் என கருதுகின்றனர்-ஆனால் அவருக்கும் புட்டினிற்கும் சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது-அவர் உக்ரைன் யுத்தத்தை தவறாக கணித்ததே இதற்கு காரணம் என உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போர்ட்டினிகொவ்வும் அவரது பிரிவுமே உக்ரைன் மக்களின் கருத்துக்களையும் உக்ரைன்இராணுவத்தின் திறமையையும் மதிப்பிடும் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாகயிருந்தனர்.
போர்ட்டினிகொவ்வும் ரஸ்ய உயர்குழாமின் சில பிரிவினரும் புட்டினை பதவியிலிருந்து அகற்றுவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆராய்கின்றனர்,நஞ்சூட்டிக்கொல்வது - திடீர் மரணம் விபத்து போன்றவற்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படுகின்றது என உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரஸ்ய ஜனாதிபதியை கொல்வதற்கு அந்த நாட்டின் உயர் குழாமை சேர்ந்த சிலர் திட்டமிடுகின்றனர் - உக்ரைன் புலனாய்வு பிரிவினர்
Reviewed by Author
on
March 22, 2022
Rating:

No comments:
Post a Comment