அண்மைய செய்திகள்

recent
-

உக்ரைனின் மரியுபோல் மகப்பேறுமருத்துவமனை மீது ரஸ்யா தாக்குதல் - இடிபாடுகளின் கீழ் குழந்தைகள்

உக்ரைனின் மரியுபோல் மகப்பேறு மருத்துவமனை மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் மருத்துவமனை முற்றாக தரைமட்டமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விமானதாக்குதலை தொடர்ந்து குழந்தைகள் மருத்துவமனையின் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டுள்ளன என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மரியுபோல் மகப்பேற்று மருத்துவமனை ரஷ்யாவின் நேரடி தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,மக்களும் குழந்தைகளும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர், இந்த பயங்கரத்தை அலட்சியம் செய்வதன் மூலம் உலகம் எத்தனை நாட்களிற்கு இதற்கு துணைபோகப்போகின்றது, வான்வெளியை உடனடியாக மூடிவிடுங்கள் கொலைகளை தடுத்துநிறுத்துங்கள்-உங்களிற்கு அதற்கான வலுவுள்ளது ஆனால் நீங்கள் மனித தன்மையை இழக்கின்றீர்கள் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மரியுபோல் மகப்பேறுமருத்துவமனை மீது ரஸ்யா தாக்குதல் - இடிபாடுகளின் கீழ் குழந்தைகள் Reviewed by Author on March 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.