பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழை; கிளிநொச்சியில் 14 குடும்பங்கள் பாதிப்பு - 12 வீடுகள் சேதம்!
குறித்த காலநிலை காரணமாக செல்வாநகர் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 25 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை கிருஷ்ணபுரம் பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 17 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான இடர் கால உதவிகளை வழங்க மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவும், கரைச்சி பிரதேச செயலகமும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழை; கிளிநொச்சியில் 14 குடும்பங்கள் பாதிப்பு - 12 வீடுகள் சேதம்!
Reviewed by Author
on
March 19, 2022
Rating:
No comments:
Post a Comment