மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 17ஆவது நினைவு தினம்!
இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இருநிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,விளக்கேற்றி,மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவன ஈர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரான்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)இரா.சாணாக்கியன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் -பிரசன்னா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,மதப்பெரியார்கள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள்,தமிழ்தேசிய பற்றாளர்கள் தமிழ் உணர்வாளர்கள்,மதப்பெரியார்கள், இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 17ஆவது நினைவு தினம்!
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment