வறுமையில் தவித்து சினிமா பிரபலம் காலமானார்
இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தான்டி காமெடியில் மிகவும் பிரபலமடைந்தவர். வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தாலும் போறது தான் போற அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போ, காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் நடித்த காட்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்த நீங்கா காட்சிகளாகும்.
இதுபோன்ற தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரெங்கம்மாள் பாட்டி, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வறுமையில் தவித்து சினிமா பிரபலம் காலமானார்
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment