அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு நெருக்கடி: மே மாதத்துக்குள் முடிவுக்கு வரும் - வர்த்தக அமைச்சு

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் சரி செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் Laughs நிறுவனங்களுக்குத் தேவையான நிதி வசதிகள் வழங்கப்படும் என அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக வங்கி எரிவாயு கொள்வனவுக்கு 90 மில்லி யன் அமெரிக்க டொலரை வழங்கும். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் சந்தை அளவுக்கேற்ப பணம் விநியோகிக்கப் படும் என அவர் தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்காலத்தில் எரிவாயு விநியோக நடவடிக்கையில் நகர்ப்புற சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. ஏனென்றால், 25% எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். முன்னதாக, நாளாந்தம் 60,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், எதிர்காலத்தில் அந்த எண்ணிக் கையை 30,000 ஆகக் குறைக்க வேண்டும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே, 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன் விநியோகச் செயல்முறை நேற்று ஆரம்பமானது.


எரிவாயு நெருக்கடி: மே மாதத்துக்குள் முடிவுக்கு வரும் - வர்த்தக அமைச்சு Reviewed by Author on April 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.