மாமனிதர் சிவராம் (தராகி) அவர்களுடைய 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அனுஷ்டிப்பு
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் (தராகி) அவர்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து மாமனிதர் சிவராம் அவர்களுடைய திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது
இந்நிகழ்வில் விடுதலை பயணத்தில் சிவராம் அவர்களின் ஊடகப் பங்களிப்பு எனும் தலைப்பில் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் அவர்களுடைய சிறப்புரையும் அதனைத் தொடர்ந்து இன்றைய பொருளாதார நெருக்கடியும் இதன் எதிர்கால போக்கும் என்னும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் நவநீதன் அவர்களுடைய சிறப்புரையும் சமகாலத்தில் தமிழர்களின் கலை வடிவங்கள் எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் இளங்கீரன் அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்
நிகழ்வில் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
மாமனிதர் சிவராம் (தராகி) அவர்களுடைய 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment