அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு.

அரசாங்கத்திற்கு எதிராகவும் ,அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை ( காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -குறித்த கண்டன போராட்டம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற உள்ளது. 

சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். -எனவே குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள்,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.




மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு. Reviewed by Author on April 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.