ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!
லண்டனில் அதிகபட்சமாக 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
சால்மோனெல்லா நோய் என்பது பாக்டீரியா தொற்று ஆகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. டைப்பாய்ட் காய்ச்சலும் இந்த பாக்டீரியா மூலம்தான் ஏற்படுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்ட 2 மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.
தொடக்கநிலையிலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியும்.
பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவுகிறது. குறிப்பாக மாசடைந்த உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி ஆகியவைகள் மூலம் பரவுகிறது. தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment