ஐ.நா பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது வான்வழித் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா
உயர் ரக நுட்பங்களைக் கொண்ட ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடனடியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், ஐ.நா மற்றும் அதன் பிரதிநிதித்துவத்தை அவமானப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சியென உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மதிக்காத ரஷ்ய ஜனாதிபதியின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக ஜெர்மனி விமர்சித்துள்ளது.
உக்ரைனில் போர்க்குற்றம் புரிந்ததாக ரஷ்யா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.
ஐ.நா பொதுச்செயலாளரின் விஜயத்தின் போது வான்வழித் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment